பெற்றோராக இருந்தாலும், 'குழந்தைகளைத் திருத்துகிறேன்' என்ற பெயரில் அவர்களை அடித்தல், சித்திரவதை செய்தல், பாரிஸில் சட்டப்படி குற்றமாகும். பெற்றோருக்கான தண்டனை, குழந்தை தன் ஆசிரியரிடமோ சக நண்பனிடமோ அல்லது பொலிஸாரிடமோ கொடுக்கும் ஒரு...
பிரான்ஸில் மணமகன் கறுப்பாக இருப்பதாக கூறி சம்பந்த கலப்புடன் திருமணத்தை நிறுத்தி தமிழ் மணமகள்! முழுமையான சம்பவம் வீடியோவில் உண்டு..
https://youtu.be/sTBmQxgWK-Y
லாச்சப்பல்: பிரான்ஸ் தமிழர்களில் கிட்டத்தட்ட 500 ஈழதமிழருக்கு மேல் தின குடிக்கு அடிமையாகியுள்ளதாகசில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...இவர்களில் வீசா குடியுரிமை கிடைத்தவர்கள்,குடும்பங்கள்உள்ளவர்களில் இருந்து சில மாதங்கள் முன்னர் வந்து இறங்கியவர்கள் வரை இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இவர்கள் விடிந்தது முதல் இரவு வரை குடிப்பதும் படுப்பதுமாக இருப்பதாகவும் ஆங்காங்கே கிடைக்கிறஇடங்களில் தங்குவதுமாக காலத்தை கழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.அண்மைகாலதாக குடியால் இறக்கும்தமிழர்களின் எண்ணிக்கை புலத்திலும் ஊரிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது..
தவிர இவர்கள் மற்றவர்களுக்கும் பழக்கி,சமூகத்தை கெடுத்து கொள்வதுடன் இவர்களை நம்பி இருக்கும்குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள் என்பதும் கண் முன்னே பார்த்து கொண்டுள்ள நிகழ்வுகள்...
பாரிஸ் நடுவீதியில் தமிழ் வட்டிகடைகாரர் தொல்லை!
உரத்த குரலில் தொலைபேசியில் , உன் அப்பா எங்க? போனை அவர்கிட்ட குடு. வெளியப் போயிருக்கிறானா? வட்டிக்காசு கட்டவழியில்ல, ஆனா பேஸ்புக்ல மட்டும் தினமும் போட்டோ போட்டுத்தள்ளுறான்? ஒழுங்காநாளைக்குள்ள வட்டியக் கட்டச்சொல்லு" என்று யாரோ சிறுகுழந்தையை மிரட்டியிருக்கிறார்
தமிழர்கள் திருந்துவார்களா? இப்படி அவசரத்துக்கு வாங்கி சொந்த பிள்ளையை அடுத்தவனிட்ட பேச்சு வாங்கவைக்கிறதுதான் பெற்றோரின் லட்சணமா? முடிஞ்சா உழைச்சு வாழுங்க,மானங்கெட்ட தனமாக கடன் வாங்கிநீங்களும் அசிங்கப்பட்டு குடும்பங்களையும் அசிங்கப்படுத்தி வாழ்ந்து என்னத்தை காண போறீங்க..?
இதே போல வட்டி காசு குடுக்கிறவர்களும் தங்கள் தொழில் நியாயப்படி கண்டிப்பா இருந்தால்தான் காசுதிரும்ப வரும்,ஆனால் கொஞ்சம் இடங்கள் ஆட்களை பார்த்தும் கதைத்து கொள்ளுங்கள்...
பிரான்சு வாழ் பெற்றோர்களே உங்கள் மகனோ அல்லது மகளோ இன்றய நாட்களில் இரவு நேரங்களில் வெளிசெல்வதை கவனத்தில் கொள்ளுங்கள்..
வன்முறைகளில் இளம் வயதினர் ஈடுபட்டிருப்பதே காரணம்..அவதானம்.
தவிர வேடிக்கை பார்த்தாலும் இத்தகைய சிக்கல்களில் மாட்டும் சந்தர்ப்பங்கள் உண்டு,கலவரம் செய்பவர்கள்இவர்களை கேடயங்களாக கூட பயன்படுத்தலாம்,பொலிசாருக்கும் கலவரகார ர்களுக்கும் எங்கடபிள்ளைகளையும் பிரித்தறிவது கடினமாக இருக்கலாம்...
நடைமுறை சிக்கல்களை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொண்டு அமைதியாக எங்கள் வாழ்க்கைபார்த்து கொள்வதே சிறந்தது.கவனத்திற்கு கொள்க...
அதுமட்டுமல்ல இளம்வயதினர் வனமுறையில் ஈடுபடுவது அடையாளம் காணப்பட்டால் பெற்றோருக்கு 30000€ வரை அபராதமும் சிறைத்தண்டனையும் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.