பாரிஸ் – 13 நிர்வாகப் பிரிவின் (arrondissement) பொலீஸ் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு காவலர்களுக்கு அவசர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.
கைதான நபர் ஒருவரைச் சோதனையிட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரே சுடப்பட்டு ப்படுகாயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் மீது வன்செயல் புரிந்தவர் என்று கூறப்படும் அந்த நபரைக் கைது செய்து பொலீஸ் நிலையத்தில்வைத்துச் சோதனையிட்ட சமயத்திலேயே அந்த நபர் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரது துப்பாக்கியைப்பறித்துச் சுட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏனைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகப் பாரிஸ் நகரப் பொலீஸ்ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
- பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)
- பிரான்சில் வாழும் முதியவர்கள், நோயாளிகளுக்கு அரச உதவிகள், பராமரிப்புச் சேவைகள்
- பிரெஞ்சு குடியுரிமை நேர்காணல்: முக்கிய கேள்விகள், பிரான்ஸ் வரலாறு / கலாச்சாரத் தயாரிப்புகள்
- பிரான்சில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான Dossier தயாரித்தல்: Garant இல்லாதவர்களுக்கு Visale உதவி
- பிரான்ஸ் வங்கிகள் கணக்கு தொடங்க மறுத்தல்: Banque de France இன் ‘Droit au Compte’ உரிமை


